8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.

சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் முழுமையாக சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.
Published on

புதுடெல்லி,

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ((NCERT)) புதிதாக அச்சடிக்கப்பட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் நீதித்துறை பற்றிய சர்ச்சைகுரிய கருத்துகள் இடம்பெற்றதாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை கடந்த பிப். 26-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, அந்த பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இது நீதித்துறைக்கு எதிரான சதி என்றும், திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட சமூக அறிவியல் புத்தகத்தை மேற்கொண்டு பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மேலும், அதிலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது. மேலும்

இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் என்.சி.இ.ஆர்.டி. இயக்குநருக்கும், பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி. நிர்வாக இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில், “நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கோருகிறோம். சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் முழுமையாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படும். இனி விற்பனைக்கு கிடைக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com