மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் மீட்பு

மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் மீட்பு
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தை சேர்ந்த தன்மய் (வயது 5) என்ற சிறுவன் கடந்த 6-ந் தேதியன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த சுமார் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவன் விழுந்து விட்டான்.

தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் களமிறங்கிய அவர்கள் சுமார் 40 அடி ஆழத்தில் அவன் இருப்பதை கண்டறிந்தனர்.தொடர்ந்து 5 நாட்களாக மீட்புபணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறந்த நிலையில் சிறுவனின் உடலை மீட்டனர்.

சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com