

புதுடெல்லி
டெல்லி போராட்டத்தில் பங்கேற்காத இளைஞர் காங்கிரசார் 200-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி, வாக்குகளை காப்போம், ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கடந்த 1-ந்தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தியது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
எனினும் சில மாநிலங்களில் இருந்து இளைஞர் காங்கிரசார் வரவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் பேரணியில் பங்கேற்காத காரணத்தால் இளைஞர் காங்கிரஸ் தலைமை அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இதன்படி 200-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.