பிரம்மோற்சவ விழா: மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருப்பதி, திருமலை நகரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா: மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருப்பதி, திருமலை நகரம்
Published on: 

திருப்பதி,

ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி, திருமலை நகரம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

கூடுதல் பக்தர்கள் வருவார்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு திருப்பதி, திருமலை நகரை மின்விளக்கு அலங்காரத்தால் ஒளிர செய்ய தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்த தேவஸ்தான இணை அதிகாரி சரத் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களின் கூட்டத்தை விட, நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு போதுமான வசதிகளை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு அவசியம்

திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் கட்டி டங்கள், கருடா சர்க்கிள், நந்தி சர்க்கிள் உள்பட 17 முக்கிய சர்க்கிள்கள், திருப்பதியில் இருந்து அலிபிரிக்கு செல்லும் சாலை உள்பட 14 சாலைகளில் 20 இடங்களில் மின்னொளி யில் ஜொலிக்க சிறப்பு மின்விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்கள், 8 வாகன நிறுத்துமிடங்களில் எல்.இ.டி. மின் விளக்குகளால் அலங்கார வளைவுகள், தகவல் பலகைகள், அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் நிறுவப்பட்டு ஜொலிக்கின்றன.

வாகன நிறுத்தம், சுகாதாரம், மருத்துவச் சேவைகள், குடிநீர், கழிவறை வசதிகள், அன்னப்பி ரசாதம், பாதுகாப்பு, பொது அறிவிப்பு அமைப்புகள், வழிகாட்டிப் பலகைகள் ஆகியவை முறையாக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி, வசதியாக சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய அனைத்துத் துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம், என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com