விபத்தில் மூளைச்சாவு: எம்.பி.பி.எஸ். மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்

இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
விபத்தில் மூளைச்சாவு: எம்.பி.பி.எஸ். மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
Published on: 

புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. லாரி டிரைவர். இவரது மகன் தேவன் (வயது 19).

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு

இவர் நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறையில் தேவன் சொந்த ஊரான கீழிருப்புக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர், தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி நெல்லித்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.

மூளைச்சாவு

அப்போது இவரது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தேவன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

6 பேர் மறுவாழ்வு பெற்றனர்

இதையடுத்து, தேவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உறுப்புகள் தானமாக பெறப்பட்டு இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மேலும் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் இரு நபர்களுக்கு பார்வை கிடைத்தது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

X