இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவியுடன் இன்று இந்தியா வருகை

இளவரசி கேட்மிடில்டன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவியுடன் இன்று இந்தியா வருகை
Published on: 

லண்டன்,

இங்கிலாந்து பட்டத்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்மிடில்டன் ஆகியோர் 3 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) மும்பை வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் இவர்கள், நாளை உள்ளூர் கிரிக்கெட் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

17-ந் தேதி நடைபெறும் 'எர்த்ஷாட்' சுற்றுச்சூழல் விருது விழாவில் சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்களுடன் கலந்து கொள்கிறார்கள். 18-ந் தேதி மகப்பேறு ஆஸ்பத்திரி மற்றும் பாலிவுட் திரையுலகினரை சந்தித்து விட்டு நாடு திரும்புகிறார்கள். புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு இளவரசி கேட்மிடில்டன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X