அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை

புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார். எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத்திற்கான வரி குறைக்கப்படவில்லை. இதனால், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலை உள்ளது.

அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை
பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வெங்காய நிதி நிலை அறிக்கை - இந்திய கம்யூனிஸ்டு கட்சி

பொதிகை மலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் கொண்டு வரப்படும். ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்.

அதிவேக ரெயில்கள் இயக்க 7 வழித்தடங்கள் அமைக்கப்படும். அரியவகை தாது வழித்தட திட்டம் அமைக்கப்படும். இதற்காக 4 மாநிலங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com