மும்பையில் 117 வருட பழமையான கட்டிடம் மழலையர் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக இடிந்து விழுந்தது

மும்பையில் 117 வருட பழமையான கட்டிடம் மழலையர் பள்ளி காலை தொடங்குவதற்கு முன்னதாக இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
மும்பையில் 117 வருட பழமையான கட்டிடம் மழலையர் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக இடிந்து விழுந்தது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் பெந்தி பஜார் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இச்சம்பவம் காலை 8:30 மணியளவில் நேரிட்டது. கட்டிடத்தில் மழலையர் பள்ளி காலை தொடங்குவதற்கு முன்னதாக விபத்து நேரிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 117 வருட பழமையான 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் மழலையர் பள்ளி செயல்பட்டு வந்து உள்ளது. காலை பள்ளி தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது என மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தையின் தந்தை கூறிஉள்ளார்.

ஹூசைனி கட்டிடத்தில் அடித்தளத்தில் மழலையர் பள்ளி செயல்பட்டு வந்து உள்ளது. காலை 9 மணியளவில் பள்ளி தொடங்க விருந்து உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகளும் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக சம்பவம் நேரிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது என கூறிஉள்ளனர். மும்பையில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில் பழைய கட்டிடம் இடிந்து உள்ளது.

மராட்டியத்தில் மழை காலங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இவ்விவகாரம் கோட்டிற்கும் சென்றது. மும்பை மாநகராட்சியும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்தாக பழைய கட்டிடங்களை அடையாளம் கண்டு இடிக்கும் பணிகளையும் தொடங்கியது. இது தொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டது. இப்போது மிகவும் பழமையான பள்ளியில் மழலையர் பள்ளி செயல்பட்டது எப்படி? அனுமதி பெற்றது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது.

இன்று காலை 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com