‘தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரெயில் சேவை தொடங்கும்’ - சந்திரபாபு நாயுடு

புல்லட் ரெயில் சேவைக்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“"விரைவில் தென் இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை தொடங்க உள்ளது. அதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, அமராவதி, மற்றும் பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் உள்ள சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புல்லட் ரெயில் சேவை பயன்படும்.
புல்லட் ரெயில் சேவை மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் சாலைகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளன. புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் கூட சர்வதேச தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






