பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியால், கேரளாவில் இன்று முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ் கட்டணம் உயர்கிறது. அரசு பஸ் உள்பட அனைத்து பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பஸ்களில் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com