மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x

கோப்புப்படம் 

மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. இதனால் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே குவியும் நுாற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர். இதனால், அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், 'ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா' தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள், மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தடையை மீறி புறாக்களுக்கு உணவு கொடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், புறாக்களுக்கு தானியங்களை வழங்கியதற்காக தாதரில் வசிக்கும் நிதின் சேத் (52) என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயைப் பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதின் சேத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

1 More update

Next Story