வங்கிக் கணக்குகளை நினைவில் வைக்க முடியவில்லையா? உங்களுக்கு உதவ காத்திருக்கிறது ரிசர்வ் வங்கி!

வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வைப்புத்தொகையை உத்கம் என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளை நினைவில் வைக்க முடியவில்லையா? உங்களுக்கு உதவ காத்திருக்கிறது ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கி
Published on: 

புது டெல்லி,

வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வைப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டறிய வசதியாக 'உத்கம்' என்ற பிரத்யேக இணையதளத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொதுமக்கள் தங்களது பழைய வங்கி கணக்குகளை நினைவில் வைத்திருக்க முடியாமல் சிரமப்பட்டால், ரிசர்வ் வங்கியின் https://udgam.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத்தொகை விவரங்களை தேடி தெரிந்து கொள்ளலாம்.

விவரங்களை பதிவு

இதற்கு, சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்நுழைந்து, வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பான் கார்டு எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து தேட வேண்டும். இந்த இணையதளம் வைப்புத்தொகையை தேடுவதற்கான வசதியை மட்டுமே வழங்கும்.

கே.ஒய்.சி. ஆவணங்கள்

எனவே, தங்களது பணம் இருப்பதை உறுதி செய்தவுடன், வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் எந்தவொரு கிளைக்கும் நேரில் சென்று, தங்களது 'கே.ஒய்.சி.' ஆவணங்களை சமர்ப்பித்து உரிமை கோர வேண்டும். தகுதியின் அடிப்படையில் உரிய வட்டியுடன் அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிய https://rbikehtahai.rbi.org.in/tamil/rbi-udgam-portal.html என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் எப்போதும் விவரமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X