கார் மோதி விபத்து: 12 வயது சிறுமி பலி

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திவா மற்றும் அவரது தம்பி மீது மோதி
car accient 12-year old girl dies
Published on: 

வயநாடு,

கார் மோதி 12 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

12 வயது சிறுமி பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் - ஸ்வப்னா தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். 12 வயதில் திவா என்ற மகளும் இருந்தார். திவா தனது தம்பியுடன் நேற்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் டியூசன் சென்று கொண்டிருந்தார். எடவகை ரெண்டேனால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே அதிவெகமாக கார் ஒன்று வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 2 பேர் மீதும் மோதியது.

கைது

இதில், சிறுமி கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டார். உடன் சென்ற அவரது தம்பி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சிறுமியை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி திவா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மானந்தவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com