மும்பையில் வாகன சோதனையின்போது காவலர் மீது மோதிய கார் - 200 மீட்டர் இழுத்துச் சென்றதால் பரபரப்பு

காரில் இருந்து இறங்கிய காவலருக்கு கால் உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
மும்பையில் வாகன சோதனையின்போது காவலர் மீது மோதிய கார் -  200 மீட்டர் இழுத்துச் சென்றதால் பரபரப்பு
Published on: 

மும்பை,

மும்பையை அடுத்த நவிமும்பை கலம்பொலி பகுதியில் போலீசார் இரவு நேர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரை மறித்த காவலர் திலீப், கார் டிரைவரிடம் பேச முயற்சி செய்தார்.

தப்பிக்க முயற்சி

ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற டிரைவர், காரின் முன்னால் வந்த காவலர் மீது மோதியதோடு மட்டுமல்லாமல், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதன் காரணமாக சுமார் 200 மீட்டர் கார் முன்பகுதியில் காவலர் திலீப் இழுத்து செல்லப்பட்டார்.

வழக்குப்பதிவு

அதன்பிறகு காரில் இருந்து இறங்கிய காவலருக்கு கால் உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரில் காவலரை இழுத்து சென்றவரை தேடி வருகின்றனர். காரின் முன்பகுதியில் காவலர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X