மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு: கணவர் மீது வழக்கு

கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக 28 வயது பெண் புகார் அளித்தார்.
கணவர் மீது வழக்கு
Published on

தானே,

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ''34 வயதான எனது கணவர் நான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் என்னை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு உட்படுத்தினார். எனது மாமனார் என்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார்.

பெற்றோர் எனக்கு கொடுத்தனுப்பிய நகைகளை தங்களிடம் ஒப்படைக்காத காரணத்தால் மாமியார் உள்பட கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று புகாரில் கூறிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் மனைவியிடம் இயற்கைக்கு மாறான உறவு கொண்ட கணவர் மற்றும் பெண்ணை அடித்து துன்புறுத்திய அவரது பெற்றோர் உள்பட உறவினர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com