பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: 1-ந்தேதி விசாரணை

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 1-ந்தேதி நடைபெறுகிறது.
பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: 1-ந்தேதி விசாரணை
Published on

புதுடெல்லி,

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி அந்த கட்சி தேர்தல் கமிஷனை நாடியது. இந்த விண்ணப்பம் கடந்த 20.2.2024 அன்று அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com