வதந்தியால் இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு - 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கிராம மக்கள் தாக்கியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வதந்தியால் இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு - 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
Published on

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, அசாமின் கார்பி ஆங்கலாங் மாவட்டத்தில் உள்ள பஞ்சுரி கசாரி கிராமத்திற்கு நிலோத்பல் தாஸ் மற்றும் அபிஜித் நாத் ஆகிய இரு இளைஞர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுகிறது என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பிய கிராம மக்கள், அந்த இளைஞர்களை வழிமறித்து சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மற்ற 25 நபர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com