சாதியை மனதில் இருந்து அகற்றவேண்டும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

இந்தியாவை அதன் உச்ச கட்ட பெருமைக்கு கொண்டு செல்வதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமாகும் என்று மோகன் பகவத் கூறினார்.
மும்பை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது.
பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.இதற்கு முடிவுகட்ட, மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாக செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும். ஒட்டுமொத்த சமூகத்துடன் சேர்ந்து இந்தியாவை அதன் உச்ச கட்ட பெருமைக்கு கொண்டு செல்வதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






