பிஸ்கட்டில் மாட்டுத்தீவனம், பாலில் சோப்புத்தூள் கண்டுபிடிப்பு... டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிஸ்கட்டில் மாட்டுத்தீவனம், பாலில் சோப்புத்தூள் கண்டுபிடிப்பு... டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
Published on: 

புதுடெல்லி,

நுகர்வோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில் பிரபல பிரியாகோல்டு நிறுவன பிஸ்கட்டில் மனிதர்கள் சாப்பிடக்கூடாத, மாட்டுத்தீவன தவிடு பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதன் தயாரிப்பு நிறுவனமான சூர்யா புட் அண்ட் அக்ரோ மீது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேபோல், பிரபல தொட்லா டைரி நிறுவனத்தின் பாலில் சோப்புத்தூள் மற்றும் காஸ்டிக் சோடா கலந்திருப்பது அதிகாரி கள் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பால் 'பாதுகாப்பற்றது' என அறிவிக்கப்பட்டு, இந்நிறுவனத்தின் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், உயேர் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனம் விற்பனை செய்த உலர் திராட்சையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பூச் சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நிறுவனம் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாய்ந்துள்ளது. உணவுப் பாதுகாப்பில் சமரசம் செய்த இந்த 3 நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com