டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
Published on

புதுடெல்லி,

காவிரி நதி நீரை சுமுகமான முறையில் பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வை கண்டு வருகிறது. இந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இதுவரை 50 முறை நடந்துள்ளது. 51-வது கூட்டம் வருகிற 28-ந்தேதியன்று நடத்த திட்டமிடப் பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த கூட்டத்தை அதற்கு முன்னதாக நடத்த முடிவு செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்துவதாக மேலாண்மை ஆணையம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் நேரடியாகவும், காணொலி வாயிலாக வும் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com