டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 34 கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

காவிரியில் இருந்து நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com