இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.15 கோடி அபராதம் - மோசடி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு

மோசடி வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

ஆமதாபாத்தின் வஸ்திராபூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளராக இருந்தவர் பிரீதி விஜய் சகிஜ்வானி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு வாடிக்கையாளர் ஒருவரின் டெபாசிட் முதிர்வு தொகையை போலி கணக்கு ஒன்றுக்கு மாற்றி முறைகேடு செய்திருந்தார்.

இதன் மூலம் வங்கிக்கு ரூ.2 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இன்டர்போல் உதவியுடன் கனடாவில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவர் மீது காந்திநகர் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பிரீதி விஜய் சகிஜ்வானிக்கு ரூ.15.06 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற வழக்கில் முதல் முறையாக இவ்வளவு அதிக தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com