சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வில் 94.40 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள், தேர்வு முடிவுக்காக காத்து இருந்தனர். ஆனால் முடிவுகள் வெளியாவது தாமதம் ஏற்பட்டதால், மாணவ-மாணவிகள் கல்லூரிகள் மற்றும் உயர் வகுப்புகளில் சேர்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சி.பி.எஸ்.சி. பிளஸ்-2 தேர்வு முடிகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.25 சதவீதமும், மாணவிகள் 93 சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று பிற்பகலில் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் 94.40 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளத்திலும், பள்ளியிலும் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com