சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ந்தேதி தொடங்க உள்ளன.
சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
Published on: 

புதுடெல்லி,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சுமார் 26.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதே சமயம், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 19.8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ந்தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி நிறைவடைகிறது. அதே போல், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Attachment
PDF
exam time table
Preview
X