10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த 31-ந்தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து சி.பி.எஸ்.இ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு இன்று (15-ந்தேதி) கடைசி நாளாக சி.பி.எஸ்.இ. அறிவித்து இருந்தது. ஆனால் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை வருகிற 31-ந்தேதி வரை சி.பி.எஸ்.இ. நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தன. எனவே இதை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2021-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்காக கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளை 15-ல் இருந்து 31 வரை நீட்டித்துள்ளோம். அதன்படி தாமத கட்டணம் இல்லாமல் 31-ந்தேதி வரை மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். தவறுவோர் நவம்பர் 1 முதல் 7-ந்தேதி வரை தாமதக்கட்டணத்துடன் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com