

பெங்களூரு,
கர்நாடகாவில் திருமணமான பெண்ணுடன் கள்ள உறவில் இருந்த மகனை கொடூரமாக கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் துமகூரு தாலுகாவில் உள்ள ஜக்கன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புட்டையா (51). ,சிவம்மா (47). தம்பதி. இவர்களின் மகன் முத்துராஜ் (21).. இவர் பெங்களூரில் பணிபுரிந்துவந்தநிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் முன்புதான் தனது சொந்த கிராமமான ஜக்கனஹள்ளிக்கு வந்துள்ளார்.
இவர்களது வீட்டில் சம்பவத்தன்று, இரவு உணவிற்குப் பிறகு, முத்துராஜ் வீட்டின் வெளியே ஒரு பாயில் படுத்து உறங்கச் சென்றார்.
மறுநாள்காலை,அவர்தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருந்ததை அவரது குடும்பத்தினர் கண்டறிந் தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது, முத்துராஜ் அதே கிராமத்தைச் சேர்ந்த, வேறு சாதியைச் சேர்ந்த திருமணமானபெண்ணுடன் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, முத்து ராஜ் அவளைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்ததும் தாயார் முத்துராஜின் சிவம்மாமகனைஎச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே உறங்கிக்கொண்டிருந்த தன் மகனைசிவம்மா கம்பியால் தலையில் தாக்கி கொன்றார். சிசிடிவி ஆதாரம் மூலமாக போலீசார் கண்டறிந்தனர் இதனையடுத்துசி வம்மா கைது செய்யப்பட்டார்.