இந்திரா காந்தி பெயரில் இருந்த 3 ஒய்வூதிய திட்டங்களின் பெயரை மாற்றிய மத்திய அரசு

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா ஓய்வூதியத் திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி பெயரில் இருந்த 3 ஒய்வூதிய திட்டங்களின் பெயரை மாற்றிய மத்திய அரசு
Published on: 

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய சமூக உதவித் திட்டத்தை 2026-2027 முதல் 2030-2031 வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக் கப்பட்டது. இதற்காக ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பெயர் இனி 'பிரதான் மந்திரி சமூக உதவித் திட்டம்' என மாற்றப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 3.20 கோடி பேர் பயனடைவார்கள். இதுகுறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விரிவான தகவல்களை வெளியிட்டார்.

இதன்படி, இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம். 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் ஓய்வூதிய திட்டம்' என மாற்றப்படுகிறது. இதில் 79 வயது வரையிலான பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.375 ஆகவும், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ரூ.625 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், இதற்கான மாற்றுத்திறன் தகுதி அளவு 80 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பிறப்பு முதல் கணக்கிடப்படும்.

இதேபோல முதியோர் ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா ஓய்வூதியத் திட்டம்' எனவும், விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி வித்வா ஓய்வூதியத் திட்டம்' எனவும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தேசிய குடும்ப நலத்திட்டம் இனி 'பிரதான் மந்திரி பரிவார் லாப யோஜனா' என அழைக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com