

புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகா ரத்தை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் நாடு தழுவிய மக்கள் இயக்கமாக வெடித்ததை அடுத்து, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை விசாரிக்கலாம், ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந் தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீதான அனைத்து எப்.ஐ.ஆர்-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என சிஜேபி எச்சரித்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது. டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் ஊடுருவுவதைத் தடுக்க - இரும்புத் தடுப்புகள் ஒன்றாகச் சேர்த்து வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகள்:-
* அனைத்து எப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.
* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.