கியாஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

மத்திய அரசு எந்த விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.என டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியூள்ளார்.
கியாஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலத்தில் ஆட்டோ டிரைவர்கள் எல்.பி.ஜி. கியாசுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்த்தேன். கியாஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் அலட்சி யமே முக்கிய காரணமாகும். ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்பது பற்றி தெரிந்திருந்தும் மத்திய அரசு எந்த விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசின் வெளியுறவு கொள்கை, அவர்கள் முன்எச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் தான் தற்போது ஆட்டோ டிரைவர்கள் கியாஸ் கிடைக்காமல் பரிதவித்து வரு கின்றனர். நம்மால் தான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என் பது தெரிந்திருந்தும் மத்திய அரசு மவுனமாக இருந்து வரு கிறது. கியாஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக் களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாகல்கோட்டை மற்றும் தாவணகெரே தெற்கு தொகுதிக ளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக கட்சி தொண்டர்கள் நேர்மையாகவும், கடுமையாகவும் உழைக்கிறார்கள். காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களையும் ஒவ்வொரு வீட்டுக்கும் கட்சி தொண்டர்கள் கொண்டு போய் சேர்த்துள்ளனர். விலைவாசி உயர்வால் சிக்கி தவித்த மக்க ளுக்கு உத்தரவாத திட்டங்கள் பயன் உள்ளதாக இருக்கிறது.

மந்திரி ஜமீர் அகமது கான் கேரளத்தில் பிரசாரத்தில் ஈடுபட் டுள்ளார். கர்நாடகத்தில் நடக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்கவில்லை. கேரளத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வருவதாக ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதர வாக பிரசாரம் செய்ய யார் வந்தாலும், வராவிட்டாலும் பிரச் சினை இல்லை. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி யாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com