

பெங்களூரு
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், நாம் அரசியல் தத்துவங்களைக் கடந்து, நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராகவோ அல்லது அதன் அரசை சேர்ந்தவராகவோ இருந்தாலும், அந்த அரசு மத்திய அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி, மிகவும் ஏழ்மையிலுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்றார். நாம் அனைவரும் மேக்கிங் ஆஃப் டெவலப்மெண்ட் இந்தியா எனும் இயக்கத்திற்காக பணியாற்ற வேண்டும்; இதனால்தான் நான் அதை மோடி என்று அழைக்கிறேன் என்றார். அதே சமயம் நமது சிறப்பான பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.