

புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவில்லை. ராகுல் காந்தியும் இதனை திரும்பத் திரும்ப கூறியிருக்கிறார். இந்தியாவில் ஏராளமான கடவுள்கள் இருப்பதால் கொரோனா வைரஸ் தாக்காது என்று பா.ஜனதா தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுவது அவரது நம்பிக்கை. ஆனால் அரசு முயற்சி எடுத்தால்தான் கடவுளும் உதவி செய்வார். இல்லையென்றால் எந்த உதவியும் வராது. அரசு தயார்நிலையில் இல்லையென்றால், நாளை இந்த வைரஸ் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்றார்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டுவிட்டரில், கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலை மற்றும் அதனை தடுக்க இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.