டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு; பரபரப்பு வீடியோ

டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.
டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு; பரபரப்பு வீடியோ
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தபடி வந்த 2 நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் பதறி போன அந்த பெண் ஓடி சென்று கடை ஒன்றின் முன்னால் தஞ்சமடைந்து உள்ளார். அந்த கடையில் இருந்த நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அவரை காப்பாற்ற வெளியே ஓடி சென்று உள்ளார்.

எனினும், முகமூடி கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியுடன் இருந்து உள்ளனர். இதனை பார்த்து, மிரண்டு போன அந்த நபர் மீண்டும் கடைக்குள் ஓடுகிறார். அந்த நபரை பார்த்ததும் முதலில் கொள்ளையர்கள் பின்வாங்கினாலும், பின்னர் மீண்டும் கடை வாசலில் விழுந்து கிடந்த பெண்ணை நெருங்கி உள்ளனர். அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர்.

ஆனால், அவர்களை பறிக்க விடாமல் அந்த பெண்ணும் கூச்சலிட்டு, தடுத்து, போராடி உள்ளார். எனினும் அந்த முயற்சியில் பலனில்லை. இந்த பரபரப்பு வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com