தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வு


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வு
x

தெலுங்கு தேசம் கட்சி 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அமராவதி,

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஆவார்.

தெலுங்கு தேசம் கட்சி 1982ம் ஆண்டு என்.டி.ராமராவால் தொடங்கப்பட்டது. 1995ம் ஆண்டு முதல் தெலுங்கு தேசம் கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு கடப்பா மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story