சந்திரசேகர ராவ் நாட்டின் பெரிய பணக்காரர், ஊழல் பேர்வழி: ஒய்.எஸ். சர்மிளா குற்றச்சாட்டு

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், இந்திய அரசியலில் பெரிய பணக்காரர் மற்றும் அதிக ஊழல் செய்த அரசியல்வாதி ஆவார் என ஒய்.எஸ். சர்மிளா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
சந்திரசேகர ராவ் நாட்டின் பெரிய பணக்காரர், ஊழல் பேர்வழி: ஒய்.எஸ். சர்மிளா குற்றச்சாட்டு
Published on

ஐதராபாத்,

ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ். சர்மிளா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், இந்திய அரசியலில் பெரிய பணக்காரரும் மற்றும் அதிக ஊழல் செய்த அரசியல்வாதியும் ஆவார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, அவரிடம் ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன. அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட நிதி வழங்க கூடிய அளவுக்கு திறன் பெற்றவர். அதனால், இதற்கு என்ன அர்த்தம் என்றால், சந்திரசேகர ராவ் தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என காட்டி கொள்கிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அதனால், காலேஷ்வரம் மீது பா.ஜ.க. ஏன்? விசாரணையை தொடங்க கூடாது என சர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார். சந்திரசேகர ராவ், ஒவ்வொரு விசயத்திலும் மக்களுக்கு மோசடி செய்து வருகிறார்.

தெலுங்கானா உருவாக்க தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு அவருக்கு உரிமை உண்டா? என சர்மிளா கேட்டு உள்ளார். அதற்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, அவருடைய கட்சி சார்பில் எழுப்பிய 10 கேள்விகளுக்கு சந்திரசேகர ராவ் பதிலளிக்க வேண்டும் என்றும் ஒய்.எஸ். சர்மிளா வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com