நிலவிற்கு செல்ல தயாராகும் "சந்திரயான்3" விண்கலம்..! ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த ராக்கெட் பாகங்கள்..

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
நிலவிற்கு செல்ல தயாராகும் "சந்திரயான்3" விண்கலம்..! ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த ராக்கெட் பாகங்கள்..
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III என அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.

சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.

இந்த நிலையில், விண்கலத்தை கொண்டுசெல்லவிருக்கும் எல்விஎம் எம்கே3 ராக்கெட் பாகங்கள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வந்தடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com