திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை

கோவில் அறக்கட்டளைக்கு சென்னையை சேர்ந்த நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின்(TTD) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிரணாதன அறக்கட்டளைக்கு சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நன்கொடைக்கான காசோலை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்(TTD) தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் அவரது முகாம் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தி சென்னை ஷாப்பிங் மாலின் தலைவர் மர்ரி வெங்கட ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிரணாதன அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001-ல் நிறுவப்பட்ட வெங்கடேஸ்வரா பிரணாதன அறக்கட்டளை, உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com