சென்னை ஐ.ஐ.டி.க்கு புதிய இயக்குனர் நியமனம்

சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதைப்போல டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனராக மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐ.ஐ.டி. இயக்குனராக கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுகாஸ் ஜோஷி, இந்தூர் ஐ.ஐ.டி. இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com