சத்தீஷ்கார்: சாலை விபத்தில் குழந்தை பலி; 43 பேர் காயம்

சத்தீஷ்காரில் பயணிகளை ஏற்றியபடி சென்ற பஸ் ஒன்று சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 மாத பெண் குழந்தை பலியாகி உள்ளது.
சத்தீஷ்கார்: சாலை விபத்தில் குழந்தை பலி; 43 பேர் காயம்
Published on

மகாசமுந்த்,

சத்தீஷ்காரின் மகாசமுந்த் மாவட்டத்தில் சராய்பாலி நகரருகே பயணிகளை ஏற்றியபடி சென்ற பஸ் ஒன்று சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில், 6 மாத பெண் குழந்தை ஒன்று பலியானது. 43 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தரும்படி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com