பதற்ற சூழலில் கர்நாடகா வர வேண்டாம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.கே.சிவக்குமார் கோரிக்கை

தமிழகத்திற்கு ஏற்கெனவே திறந்துவிட்ட தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பதற்ற சூழலில் கர்நாடகா வர வேண்டாம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.கே.சிவக்குமார் கோரிக்கை
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

இன்னும் உறுதியாகவில்லை

”நானும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலன்களின் அக்கறையாக உள்ளோம். நாங்கள் இருவரும் இரு மாநில நிலவரம் குறித்து தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொண்டோம். அவர் 3-ந்தேதி கர்நாடகா வருவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதியாகவில்லை.

கர்நாடகா வர வேண்டாம்..

கர்நாடகத்தில் தற்போதைய சூழல் சரியில்லை. பதற்றமான சூழலில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் சரியாக இருக்காது. எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருவோருக்கு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. சிறிது காலம் காத்திருக்கலாம். அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com