ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை

ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

விஜயவாடா,

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் விஜயவாடா நீதிமன்றம் சி.ஐ.டி. போலீசார் சந்திரபாபு நாயுடுவை காவலில் வைத்து மேல் விசாரணை நடத்த 2 நாட்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து 9 சி.ஐ.டி. அதிகாரிகள் கொண்ட குழு நேற்று ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணையை தொடங்கியது. விசாரணை முழுவதும் வீடியோவாக எடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com