

ஐதராபாத்,
ஐதராபாத்தில் திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட தெலுங்கு பட சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் கோல்கொண்டா போலீசாரிடம், ஒரு நடிகை தெலுங்கு சினிமா இயக்குனர் பவன் சாதினேனி மீது புகார் அளித்துள்ளார். அதில், ஐதராபாத் நகரில் உள்ள ஷேக் பேட்டை ஜெய்ஹிந்த் நகரில் வசிக்கிறேன். விஜயவாடாவை சேர்ந்த தெலுங்கு பட இயக்குனர் பவன் சாதினேனி (வயது 40) என்னுடன் பழக்கத்தில் இருந்தார். என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், இயக்குனர் பவன் சாதினேனியை கைது செய்தனர். கைதான இயக்குனர், பிரேமா இஷ்க் காதல், சாவித்திரி, சேனாபதி என்னும் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.