

புதுடெல்லி
அரசு பட்ஜெட்டில் அறிவித்தப்படி தேர்தல் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார் அருண் ஜெட்லி.
மக்கள் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் அரசியல் கட்சிகளிடமிருந்து அதைத் துவங்க வேண்டுமென்றார். தேர்தல் நன்கொடைக்கு வெளிப்படையான வழிமுறை ஏதுமில்லை. அரசியல் நன்கொடையை தூய்மைப்படுத்தும் பெரும் சவால் நாட்டின் முன்னேயுள்ளது என்றார் ஜெட்லி.
தற்போது இயற்கை வளங்கள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்படுகின்றன. அது வெளிப்படையாக சந்தை அணுகுமுறையில் நடக்கிறது.
வருங்காலத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வரி செலுத்தப்பட்ட பணத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெட்லி. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தேர்தல் நன்கொடையை சீர்திருத்தம் செய்ய யோசனைகளை வரவேற்றேன். இதுவரை ஒரு யோசனை கூட வரவில்லை என்றார் ஜெட்லி. அது போன்ற யோசனைகளை வரவேற்று காத்திருக்கிறேன் என்றார் ஜெட்லி.