போர் பதற்றம்: இந்தியாவில் 24 விமான நிலையங்கள் 15-ம் தேதி வரை மூடல்

9 விமான நிலையங்களுக்கு இண்டிகோ விமான சேவை வருகிற 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
போர் பதற்றம்: இந்தியாவில் 24 விமான நிலையங்கள் 15-ம் தேதி வரை மூடல்
Published on

புதுடெல்லி,

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 24 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களை அடையுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மேலும் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ் லே, சண்டிகர், தர்மசாலா, பிகானர், ராஜ்கோட், ஜோத்பூர் மற்றும் கிஷன்கர் ஆகிய 9 விமான நிலையங்களுக்கு இண்டிகோ விமான சேவை வருகிற 15-ம் தேதி அதிகாலை வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

24 விமான நிலையங்கள் விவரம்:-

1. சண்டிகர்

2. ஸ்ரீநகர்

3. அமிர்தசரஸ்

4. லூதியானா

5. பூந்தர்

6. கிஷன்கர்

7. பாட்டியாலா

8. சிம்லா

9. காங்க்ரா - காகல்

10. பதிண்டா

11. ஜெய்சால்மர்

12. ஜோத்பூர்

13. பிகானர்

14. ஹல்வாரா

15. பதான்கோட்

16. ஜம்மு

17. லே

18. முந்த்ரா

19. ஜன்மகர்

20. ஹிராசர்

21. போர்பந்தர்

22. கேஷோத்

23. காண்ட்லா

24. புஜ்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com