

பெங்களூரு,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில்(எஸ்.ஐ.ஆர்.) தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவு களை எடுத்துள்ளார். மற்ற 2 கமிஷனர்களின் ஆலோசனைகளை அவர் கேட்க வில்லை. எதிர்ப்பை மீறி அவர் முடிவுகளை எடுத்தது பகிரங்மாகி உள்ளது. இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது. அக்கட்சி கடந்த வாரம் மும்பையில் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தியது.
அக்கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா, சவுரவ்தாஸ், பிரபல யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாளை (அக்.09) டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
10 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி கடிதம் கொடுக்க வேண்டும் என்ற விதியை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பின்பற்றவில்லை என்பதால், போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் போராட்டத்திற்கு தயாராகி வருவதால் டெல்லியில் 23 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள 57 மெட்ரோ ரெயில் நிலையங்களும் இன்று இரவு 9 மணியுடன் மூடப்படும் என்று கூறப்படுகிறது.