கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் நிறைவு; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி திரும்பினார்

இந்த பயணத்தின் மூலம் ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றார்.
கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் நிறைவு; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி திரும்பினார்
Published on

புதுடெல்லி,

ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய கரீபியன் நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது மனைவி சவிதா ஆகிய இருவரும் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதன்படி முதலில் ஜமைக்கா சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு ஜமைக்கா கவானா ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் உரையாற்றினார்.

இந்த பயணத்தின் மூலம் ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றார். இதனைத் தொடர்ந்து செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகிய இருவரும் இன்று விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com