ஆயுதப்படைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் விடுப்பில் சலுகை - மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், ஒருவர் அதிகாரியாக இருந்தாலும் வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், விடுப்புகள் சம அளவில் கிடைக்கும்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

ஆயுதப்படைகளில் பணியாற்றும் பெண்களுக்கு அதிகாரிகளுக்கு இணையாக விடுப்புகளை வழங்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தப் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்புப் படைகளில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஒருவர் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், இத்தகைய விடுப்புகள் சம அளவில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதப்படைகளில் அனைத்து பெண்களுக்கும், அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுப்பு விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக விரிவுபடுத்துவது என்பது, ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்குப் பயனளிக்கும்.

இந்த நடவடிக்கை ராணுவத்தில் பெண்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதோடு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com