

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
அவ்வகையில், துங்கர்பூர் மாவட்டத்தில் இன்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:-
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மக்களுக்கு ஜனநாயகம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வாய்ப்பை மக்கள் தவறவிடக்கூடாது.
ராஜஸ்தான் மாநிலத்தை கலவரங்கள், குற்றங்கள் மற்றும் ஊழலில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ் அரசை வெளியேற்ற வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த காங்கிரஸ் வெளியேறுவது அவசியம். மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.