சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி: கேரள வாக்காளர்களுக்கு பிரியங்கா நன்றி

உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய கடினமாக உழைப்போம் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி: கேரள வாக்காளர்களுக்கு பிரியங்கா நன்றி
Published on

புதுடெல்லி,

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. இதற்காக அந்த மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில் கூறியிருப்பதாவது:

கேரளத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், அபரிமிதமான ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வழிகாட்டும் படையாக இருக்கும்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய கடினமாக உழைப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் எங்கள் நன்றிக் கடன் நன்றாக தெரியும். வயநாட்டில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் அணிக்கு வெற்றியை அளித்து இருக்கிறீர்கள். என்னுடன் சேர்த்து 8 பிரதிநிதிகளும் வயநாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com