டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி
Published on

புதுடெல்லி,

டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி இன்று அறிமுகப்படுத்தியது. அதனை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார். அப்பேது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்பேது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி, "டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சி அதன் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்." என்று தெரிவித்தார்.

ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி முன்னதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு ரூ.500-க்கு வழங்கப்படும் என்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்றும் காங்ரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com