மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல்: இன்று வெளியிடுகிறது காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ஜனதா ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில், வேட்பாளர்களை முடிவு செய்யும் காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். அக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலியில் இருந்து தனது தேர்தல் பயணத்தை தொடங்க காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ராகுல் காந்தி மற்றொரு முக்கியமான தொகுதியான அமேதியில் மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com